தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள்: போலீஸார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற பீடி இலைகள்: போலீஸார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியபட்டினம் ஜீவா நகர் கடற்கரைப் பகுதியில் மர்மநபர்கள் படகுகளின் மூலம் கடத்தலில் ஈடுபடுவதாக க்யூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் இதனைத் தொடர்ந்து அதிரடி ஆய்வுசெய்தனர்.

அப்போது கடற்கரையில் சந்தேகப்படும்படி நின்ற மெல்வர் என்பவருக்குச் சொந்தமான படகை சுற்றிவளைத்து அதிரடி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர். போலீஸார் தப்பியோட முயன்ற தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்த பிரபு(41), அலங்காரத் தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(32), தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த இரட்சகர்(36), மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்(42), திஏஸ்புரம் மெல்வர்(30) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். இதில் மெல்வரின் படகையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படகில் இருந்த பண்டல்களையும் போலீஸார் சோதனை செய்தனர். அதில் 41 பண்டல்களில் ஒன்றரை டன் அளவிலான பீடி இலைகள் இருந்ததும், அந்தப் பண்டல்களை இவர்கள் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in