
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சூர்யமாய் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணப்பட்ட 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த 19 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த 6 பேர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் நேபாளத்தை சேர்ந்தவர் என போலீஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவபவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.