தடைசெய்யப்பட்ட காற்றாடி, மாஞ்சாநூல் ஆன்லைனில் விற்பனை: போலீசிடம் வசமாக சிக்கிய பொறியியல் பட்டதாரி

தடைசெய்யப்பட்ட காற்றாடி, மாஞ்சாநூல் ஆன்லைனில் விற்பனை: போலீசிடம் வசமாக சிக்கிய பொறியியல் பட்டதாரி

ஆன்லைன் மூலம் தடைச்செய்யப்பட்ட மாஞ்சா நூல், காற்றாடி விற்பனை செய்து வந்த என்ஜினியரிங் பட்டதாரியிடம் இருந்து 1500 காற்றாடி, 2 மாஞ்சா நூல், 4 மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆன்லைன் மூலம் ரகசியமாக தடைச்செய்யப்பட்ட காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்யப்படுவதாக வியாசர்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிடைத்த செல்போன் எண்ணை வைத்து அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வீட்டிலிருந்து 1500 காற்றாடி, லொட்டாய் 600, 2 மாஞ்சா நூல், 4 மாஞ்சா நூல் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல், காற்றாடியை ரகசியமாக விற்பனை செய்த என்ஜினியரிங் பட்டதாரி பார்த்திபன்(29) என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல உயிர்களை காவுவாங்கிய மாஞ்சா நூல் விற்பனைக்கு போலீஸார் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைனில் ரகசியமாக நடைபெறும் மாஞ்சா நூல் விற்பனையை போலீஸார் கண்காணித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in