சுயேட்சை எம்எல்ஏ தலைமையில் நிதி நிறுவனத்துக்குள் புகுந்த வாடிக்கையாளர்கள்... கதவுகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!

எம்எல்ஏ நேரு தலைமையில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
எம்எல்ஏ நேரு தலைமையில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரியில், கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் நிதி நிறுவன அதிகாரிகள், போலீஸார் எனக்கூறி பணத்தை திரும்ப வசூலிப்பதாக குற்றம்சாட்டி சுயேட்சை எம்எல்ஏ தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி செட்டி தெருவில் பிரபல தனியார் நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆன்லைன் முறையில் பலருக்கு கடன் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடனை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களை அடியாட்களை கொண்டு நிறுவனம், மிரட்டுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சில இடங்களில், போலீஸ் என்று சொல்லி மிரட்டியும் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் பணத்தை வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர்.

எம்எல்ஏ நேரு தலைமையில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
எம்எல்ஏ நேரு தலைமையில் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இது தொடர்பாக உருலையான்பேட்டை சுயேட்சை எம்எல்ஏ-வான நேருவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக இன்று நேரு தலைமையில் வாடிக்கையாளர் கள் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்திற்கு வந்திருந்தனர். 50க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட வருவதாக தகவல் வெளியாகியிருந்ததால், ஊழியர்கள் நிறுவனத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். இதனால் அங்கு வந்த எம்எல்ஏ-வான நேரு மற்றும் வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

உடைந்த கதவுகள்
உடைந்த கதவுகள்

அவர்கள் வலுக்கட்டாயமாக கதவைத் திறந்து உள்ளே செல்ல முயற்சித்ததால் அங்கிருந்த கண்ணாடி கதவுகள் உள்ளிட்டவை சேதம் அடைந்தது. அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற அவர்களை போலீஸார் தடுக்க முயற்சித்த போது அதற்கும் வாடிக்கை யாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உள்ளே சென்ற வாடிக்கையாளர்கள் மற்றும் எம்எல்ஏ நேரு ஆகியோரிடம் நிறுவன உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கடனை வசூல் செய்வதில் கெடுபிடி காட்ட மாட்டோம் எனவு நிதி நிறுவனம் தரப்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in