
லக்னோவில் 12 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த மாணவி, அருகே உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளிக்கு சென்று வர இஸ்ரார் அஹமது(35) என்ற ஆட்டோ டிரைவரை அமர்த்தியதாக தெரிகிறது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்த மாணவி பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். ஆரம்பத்தில் சாக்லெட் வாங்கி தருவது, அக்கறை காட்டுவது என பழகிய ஆட்டோ டிரைவர், மாணவியிடம் அத்து மீறியுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால், கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்து போன அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அந்த மாணவியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஆட்டோ டிரைவரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆட்டோ டிரைவர் அஹமதை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...