ஆன்லைன் மூலம் பணம் பறிக்க முயற்சி... அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி பகீர் புகார்!

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

அதிமுக முன்னாள் அமைச்சர் மனைவியிடம் ஆன்லைன் மூலம் பணம் பறிக்க முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சைபர் கிரைம் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் ‌.

இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், இரண்டு மணி நேரத்தில் செல்போன் எண் செயலிழந்து விடும் எனவும் கூறி பணம் பறிக்க முயன்றனர்.

மனைவியுடன் பொன்னையன்
மனைவியுடன் பொன்னையன்

மேலும் ஆதார் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த குற்றவாளி ஒருவர் உங்களின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். எனவே மத்திய பிரதேசம் இந்தூர் காவல் நிலைய அதிகாரிகளை உடனே தொடர்பு கொள்ளுமாறு சைபர் கிரைம் மோசடி நபர் தெரிவித்தார். அந்த சைபர் கிரைம் கும்பல் இரண்டரை மணி நேரம் வீடியோ கால் மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என கூறியதுடன், எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு கைது வாரண்ட், சொத்துக்களை முடக்குவதற்கான அரசு முத்திரையிட்ட ஆவணங்களை அனுப்பி மிரட்டினார்கள்.

எனது ஆதார் ஆவணங்கள், வங்கி தகவல்களை அந்த கும்பல் கேட்டு மிரட்டல் விடுத்ததால், எனது ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் உள்ள பணத்தை திருட முயற்சிப்பதை அறிந்து கொண்டு உடனே இணைப்பை துண்டித்தேன்’ என புகாரில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன்
முன்னாள் அமைச்சர் பொன்னையன்

எனவே தன்னிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற சைபர் கிரைம் கும்பல் மீது உரிய மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனின் மனைவி சரோஜா புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in