
சிரியாவின் ராணுவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 112 பேர் உயிரிழந்தனர். அதில் 11 பெண்களும் சிறுமிகளும் அடங்குவர். 120 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹோம்ஸ்நகர் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்குப் பயங்கரவாதிகள் காரணம் என்று சிரிய ராணுவம் குறைகூறியது. தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சிரிய ராணுவம் முழுவீச்சில் பதிலடி கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் உள்ள இட்லிப் பகுதியைக் குறிவைத்துப் பதில் தாக்குதல் நடத்தப்போவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைவர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இட்லிப் வட்டாரம் ஹயாட் அல்-ஷாம் (Hayat al-Sham) என்ற கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அவர்கள் இதற்குமுன் ஆளில்லா விமானங்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்களைத் தாக்கியிருக்கின்றனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.