அரசு பஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கிய போதை ஆசாமிகள்: வேடிக்கை பார்த்த பயணிகள்!

அரசு பஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கிய போதை ஆசாமிகள்: வேடிக்கை பார்த்த பயணிகள்!

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தை தாக்கியதுடன், பேருந்து ஓட்டுநரையும் போதை ஆசாமிகள் கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

மயிலாடுதுறை அருகே சித்தமல்லியை ஒட்டி பட்டவர்த்தி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த போதை இளைஞர்கள் சிலர், அவ்வழியே செல்லும் அரசு பேருந்து பயணிகள் மீது பாட்டில் தண்ணீரை ஊற்றுவதுடன், போக்குவரத்திற்கும் அடிக்கடி இடையூறு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சித்தமல்லியில் இருந்து பட்டவர்த்தி நோக்கி வந்த அரசு பேருந்தின் குறுக்கே டூவீலரை நிறுத்தி நேற்று ரகளையில் ஈடுபட்டனர். பேருந்தை ஓட்டி வந்த குமரேன் கீழே இறங்கி ரகளையில் ஈடுபட்டவர்களை தனது செல்போனில் படம் எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாகத் தாக்கினர். அத்துடன் அரசு பேருந்து கண்ணாடியையும் உடைத்தனர். பயணிகள் கண் முன்பே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த ஓட்டுநர் குமரேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த மணல்மேடு போலீஸார், தாக்குதலுக்கு உள்ளான அரசு பேருந்தை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டுநரை தாக்கியதுடன் பேருந்தை சேதப்படுத்திய இளைஞர்களைத் தேடி வருகின்றனர். அரசு பஸ் ஓட்டுநர் தாக்கப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in