ஹாரன் அடித்ததால் ஆத்திரம்... அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ!

ஹாரன் அடித்ததால் ஆத்திரம்... அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ!

ஆந்திர அரசு பேருந்து ஓட்டுநர் மீது மர்ம கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று பெங்களூரில் இருந்து விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து நெல்லூர் மாவட்டம் கவாலி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கார் ஓட்டுநர் வழிவிடவில்லை என தெரிகிறது.

எனவே, பேருந்து ஓட்டுநர் வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். இதனால் காரில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, சாலையில் பேருந்தை வழிமறித்து காரை நிறுத்தி, பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், மத்தூர்பாடு என்ற இடத்தில் காரில் இருந்தவர்கள் மீண்டும் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை கீழே இறக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தடுக்க முயன்ற பயணிகளையும் தாக்கினர்.

அதனை வீடியோ பதிவு செய்த பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காயம் அடைந்த பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஓட்டுநரை தாக்கியது சிவாரெட்டி, வில்சன், கிரண் உள்ளிட்டோர் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். ஓட்டுநர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in