தந்தையின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவன்: தேர்வு எழுதிவிட்டு வந்தபோது கும்பல் வெறிச்செயல்

தந்தையின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவன்: தேர்வு எழுதிவிட்டு வந்தபோது கும்பல் வெறிச்செயல்

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த மார்ச் 15-ம் தேதி அந்த மாணவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் (20) என்ற வாலிபரை கேலி கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் கார்த்திகை கத்தியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே வெட்டுப்பட்ட கார்த்திக் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்பட்டார். பின்னர் கார்த்திக் அளித்த புகாரில் ஐஸ்ஹவுஸ் போலீஸார் பிஸஸ்2 மாணவன் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாணவன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக நீதிமன்ற அனுமதியோடு பரோலில் வெளியே வந்தார். இன்று ராயப்பேட்டை வி.எம் தெருவில் உள்ள கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் தேர்வு எழுதிவிட்டு தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாணவனை கத்தியால் வலது பக்க கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் மாணவன் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனே ரத்த காயத்துடன் கிடந்த மகனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மாணவன் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்அவுஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் பழிக்குப்பழியாக தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து மாணவனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in