உ.பி.,யில் பரபரப்பு... ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு... 4 மாணவர்களை கைது செய்த போலீஸார்!

4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்
4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்

உத்தர பிரதேச மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்கலைகழக மாணவர்கள் 4 பேரை தீவிரவாத எதிர்ப்பு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்
4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சிலர் செயல்படுவதாக தீவிரவாத எதிர்ப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 4 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான புத்தகங்கள், செல்போன் மற்றும் பென் டிரைவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட இவர்கள் தயாராகி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் தனியாக மாணவர் அமைப்பை ஒன்றை நிறுவி மேலும் பலரை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களாக மாற்ற இவர்கள் 4 பேரும் திட்டமிட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் 4 பேரையும் உபா சட்டத்தில் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்
4 மாணவர்களை கைது செய்த தீவிரவாத எதிர்ப்பு போலீஸார்

ஏற்கனவே சட்டீஸ்கர் மாநில போலீஸார், உத்தர பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக இருந்த வாலிபர் ஒருவரை கடந்த 7ம் தேதி கைது செய்திருந்தனர். இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் குறித்த தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள, ரகீப் இமான் அன்சாரி, நவேத் சித்திக், முகமது நோமன், முகமது நஜீம் ஆகிய நால்வரும் பட்டப்படிப்பு பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in