திருமணமான 21வது நாளில் காதல் கணவனை இழந்த மனைவி... பட்டாசு விபத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

உயிரிழந்த வேடப்பன்
உயிரிழந்த வேடப்பன்

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவருக்கு திருமணமாகி 21 நாட்கள்தான் ஆகியுள்ள நிலையில், காதல் கணவனை பிரிந்த மனைவி கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 வெடி விபத்து
வெடி விபத்து

அத்திப்பள்ளியில் செயல்பட்ட பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அதில் 7 பேர் தருமபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள். அதில் வேடப்பனும் ஒருவர்.

பி.எட் படித்துள்ள அவர், தனது கல்லூரி காதலியை கடந்த மாதம் 17ம் தேதி திருமணம் செய்துள்ளார். தீபாவளி திருவிழா நெருங்கியுள்ளதால் சீசன் வேலைக்காக பட்டாசு குடோனுக்கு நண்பர்களுடன் வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு நிகழ்ந்த விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். திருமணமாகி 21 நாட்களே ஆன நிலையில், காதல் கணவனை இழந்து, நிற்கதியாயை நிற்கிறார் வேடப்பனின் மனைவி. அவரது நிலையை கண்டு அந்த கிராம மக்கள் கண்ணீர் சிந்தும் நிலையில், அவரின் எதிர்கால வாழ்க்கைக்காக அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in