காஞ்சியில் அதிர்ச்சி... நள்ளிரவில் எரிந்த பள்ளிக்கூடம்; புத்தங்கள், ஷுக்கள் சாம்பல்

காஞ்சியில் அதிர்ச்சி... நள்ளிரவில் எரிந்த பள்ளிக்கூடம்; புத்தங்கள், ஷுக்கள் சாம்பல்

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் ஷுக்கள் மற்றும் புத்தகங்கள் எரிந்து நாசமானது.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று ஆயுத பூஜை என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிக்கூடத்தில் இருந்து புகை வருவதை பார்த்த அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்புதுறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தாலும் பள்ளியின் அறையில் இருந்த ஷுக்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து சிவகாஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in