சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆசிரியருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறை தண்டனை

அசாமில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிராங் பகுதியில் பயிற்சி ஆசிரியராக இருந்த சன்ஜிப் குமார் ராய் என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து பிஜ்னி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை கைது செய்தனர்.

ஆசிரியரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை விரைவாக நடத்தப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in