அதிகாலையில் அதிர்ச்சி... சக வீரர்கள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பாதுகாப்பு படைவீரர் தற்கொலை!

தெற்கு மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள்.
தெற்கு மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள்.

மணிப்பூரில், அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள் 6 பேர் மீது சக வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் ரைபிள்ஸ் படையினர், தெற்கு மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படைப்பிரிவில் வீரர் ஒருவர் இன்று காலை திடீரென துப்பாக்கியை எடுத்து தனது சக படைவீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள்.
அசாம் ரைபிள்ஸ் படைவீரர்கள்.

இதில் 6 படைவீரர்களும் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய வீரர், தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்த மற்ற வீரர்கள், படைப்பிரிவின் உயர்அதிகாரிகள் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் தாக்குதல் நடத்திய வீரர் இறந்து விட்டதாகவும், மற்ற அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயமடைந்த ஆறு வீரர்களும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கும், மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இன வன்முறைக்கும் தொடர்பு இல்லை. துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர், சுராசந்த்பூரைச் சேர்ந்தவர். சமீபத்தில் தான் பணியில் சேர்ந்துள்ளார். அவர் சுட்டுக் கொன்றவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in