
திருமணத்திற்குப் புறம்பான தொடர்பில் இருப்பதாக மனைவியைச் சந்தேகப்பட்டு அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன் இன்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் பாரமுண்டா பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கத்தியுடன் நுழைந்தவர், அங்கிருந்து பெண்ணை ஓட ஓட விரட்டி வெட்டினார்.
அதை அங்கிருந்த ஊழியர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களையும் வெட்டி விடுவதாக அந்த வாலிபர் மிரட்டினார். இதுகுறித்து ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், பெண்ணை வெட்டியவர் அவரது கணவர் என்று தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனது மனைவி திருமணத்திற்குப் புறம்பான தொடர்பில் இருப்பதாக கணவர் சந்தேகப்பட்டு வந்தார். இந்த நிலையில், தான் மனைவி வேலை செய்யும் அலுவலகத்திற்குள் புகுந்து அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணின் கணவரை போலீஸார் இன்று கைது செய்தனர். தனியார் நிறுவன ஊழியரான அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!