5 வயது சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்து கொலை...சினிமா பாணியில் சிக்கிய குற்றவாளி!

5 வயது சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்து  கொலை...சினிமா பாணியில் சிக்கிய குற்றவாளி!

டெல்லியில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து உடலை வீசி விட்டுச் சென்ற கொலைகாரனை போலீஸார், சிசிடிவி உதவியுடன் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் மார்ச் 24-ம் தேதி பவனா பகுதியில் 5 வயது காணாமல் போனார். ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது அவர் காணாமல் போனதாக பவானா காவல் நிலையத்திற்கு இரவு 10.27 மணிக்கு அழைப்பு வந்துள்ளது. பவானா செக்டர் 1-ல் இருந்து 5 வயது சிறுமி கடத்தபபட்டதாக புகார்தாரர் கூறியுள்ளார்.

அத்துடன் தேநீர் கடை நடத்தும் சிறுமியின் பெற்றோர், மாலை 5 மணியளவில் சிறுமியை கடைசியாக பார்த்ததாகவும், அதன் பின் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர்.

பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில்
பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில்

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மார்ச் 25-ம் தேதி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலிஸார் சோதனை செய்தனர். அப்போது சிறுமியை ஒருவர் அழைத்துச சென்றது தெரிய வந்தது. அவர் பெயர் தொட்டன் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.

உடனே போலீஸார், தொட்டன் வேலை செய்யும் இடத்திற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டது தெரிய வந்தது அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, ​​அவர் புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றது தெரிய வந்தது.

அவர்கள் செல்வற்குள் ரயில் புறப்பட்டு சென்று விட்டது. இதையடுத்து மார்ச் 26-ம் தேதி கொல்கத்தா விமான நிலையத்துக்கு போலீஸாரின் தனிப்படை சென்றது. அங்கு சென்ற தனிப்படை, அசன்கோல், ரயில் நிலையத்திற்கு வந்தனர். பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் தொட்டன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 27-ம் தேதி அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை தொட்டன் ஒப்புக்கொண்டார். மார்ச் 24 அன்று மாலை 7.30 மணியளவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை பவானாவில் உள்ள தொழிற்சாலையில் வீசியதாக அவர் கூறினார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சிறுமியின் சடலம் ஹோலி கொண்டாட்டங்களை அடுத்து, தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது,

இதனால் அந்த தொழிற்சாலையில் உடலை வீசியது தெரிய வந்தது. தொட்டன் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 302 (கொலை), 376 (பலாத்காரம்) ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை நேற்று கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in