இயக்குநர் கவுதமனுக்கு பிடி வாரண்ட்! நீதிமன்றம் உத்தரவு!

இயக்குநர் வ. கவுதமன்
இயக்குநர் வ. கவுதமன்

நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராகாத சினிமா இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைருமான வ. கவுதமனுக்கு நீதி மன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

வ.கவுதமன்
வ.கவுதமன்

நீர் தேர்வினால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில், சினிமா இயக்குநர் வ.கவுதமன் தலைமையில் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக கவுதமன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை உரிமையியல், குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இயக்குநர் கவுதமன் ஆஜராகமல் இருந்து வந்துள்ளார்.

இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இயகுநர் கவுதமன் ஆஜராகவில்லை. இதையடுத்து கவுதமனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in