மதுபோதையில் சாலையில் நடனம் - வீடியோ எடுத்த நடத்துனர் மீது தாக்குதல்

மதுபோதையில் சாலையில் நடனம்
மதுபோதையில் சாலையில் நடனம்

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் தனது உறவினர் ஒருவருடன் ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது, அரியலூர் - தஞ்சாவூர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர், தனது உறவினருடன் கட்டிப்பிடித்து நடனமாடியுள்ளார்.

இதனை அவ்வழியாக சென்ற அரசு பேருந்தில் இருந்த நடத்துனர் கெளதம் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இதனை பார்த்த போதை ஆசாமி சுதாகர் ஏன் வீடியோ எடுக்கிறாய் என கூறி பேருந்தை நிறுத்தியதோடு, நடத்துனர் கெளதமனை பிடித்து இழுத்து சட்டையை கிழித்துள்ளார். இதையடுத்து, காவல் நிலையம் சென்ற நடத்துனர் கெளதமன், சுதாகர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in