மதம் மாறச் சொன்னதாக மாணவி தற்கொலை செய்யவில்லை!

தஞ்சாவூர் எஸ்பி விளக்கம்
மாணவி லாவண்யா
மாணவி லாவண்யாtwitter
பாஜகவினர் போராட்டம்
பாஜகவினர் போராட்டம்twitter

இது குறித்து மாணவியின் தந்தை முருகானந்தம் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை(62) கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா இறந்தார்.

இதனிடையே, மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திரண்டு, மாணவியை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே வழக்கை மாற்றி பதிவு செய்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனிடையே, மாணவி தற்கொலை விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா, "தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி லாவண்யா விஷம் குடித்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 15ம் தேதி தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிகிச்சையில் இருந்த மாணவியிடம் டாக்டர்களின் அனுமதியுடன் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியாtwitter

காவல்துறையினர் நடத்திய விசாரணையிலும், மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மதமாற்றம் தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அதுபோல அவரது பெற்றோரும் சொல்லவில்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் மாணவி சிகிச்சையில் இருப்பது போலவும், அவர் பேசுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

இது சிறார் சட்டப்படி குற்றம். இதை எடுத்தது, பரப்பியது யார்? என்பது குறித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த மற்றொரு புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in