மதுவினால் ஏற்பட்ட தகராறு... மனமுடைந்த இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடைகூடுதல் பணம் கேட்டால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் கடைகளுக்கு எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சியில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர், தனது நண்பர்களான செல்வம், பிரகாஷ் ஆகியோருடன் கடந்த சனிக்கிழமையன்று மது அருந்தியுள்ளார். அங்கு மூவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வம், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 மது
மதுThe Hindu

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பிறகு, செல்வத்தின் உடல் சொந்த கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அவருடைய உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல், செல்வத்தின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்படாத வண்ணம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஓடியந்தலை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in