கால்வாயில் விழுந்து உயிரை விட்ட வயதான தம்பதி... காரணம் தெரியாமல் தவிக்கும் போலீஸ்!

கால்வாயில் அடித்துச் செல்லப்படும் தம்பதி
கால்வாயில் அடித்துச் செல்லப்படும் தம்பதி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வயதான தம்பதிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் அவர்கள் யார்?  எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்  என்று கண்டறிய முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கு பிஏபி பாசன திட்டத்தின் கீழ் காண்டூர் கால்வாய் மூலம் சர்க்கார்பதி பவர் ஹவுஸில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று மாலை 70 வயது மதிக்கத்தக்க கணவரும், 65 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் காண்டூர் கால்வாய்க்கு வந்துள்ளனர். அவர்கள் கால்வாயில் குதிக்க முயன்றதைப் பார்த்து அப்பகுதியில் மாடு மேய்த்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அதையும் மீறி தம்பதியர் கால்வாயில் குதித்தனர். இருவரும் சுமார் ஒரு கிமீ தூரம் கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கால்வாயில் குதித்தவர்களை தேடி வந்தனர். அவர்களில்  பெண்ணின் உடல் நேற்று மாலையே கரை ஒதுங்கியது.  பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் பெரியவரின் உடல்  இன்று காலை  மீட்கப்பட்டது. 

இருவரின் உடல்களும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இறந்தவர்கள் யார்?,  எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது  குறித்து தளி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற விவரம் தெரியவில்லை. 

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in