குளிர்பானத்தில் போதை மாத்திரை... காட்டுப்பகுதியில் மாணவி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ ஓட்டுநர் கைது!

குளிர்பானத்தில் போதை மாத்திரை... காட்டுப்பகுதியில் மாணவி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ ஓட்டுநர் கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

லக்னோவில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது 8-ம் வகுப்பு படிக்கும் மகளை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அதில், ஆட்டோ ஓட்டுநர் கடந்த மாதம் 30-ம் தேதி போதை மருந்து கலந்த குளிர்பானத்தை சிறுமிக்கு கொடுத்து, பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும், இதனை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த தாய், வற்புறுத்தி கேட்கவே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.

தந்தை வெளியூரில் வேலை பார்த்து வருவதால் தாய் மட்டும் மகளை வளர்த்து வருகிறார். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in