திருமணத்தை மீறிய உறவு... தற்கொலை செய்து கொண்ட ஜோடி... பிரிக்க முயன்றதால் விபரீதம்!

சந்திரசேகர், பூஜா
சந்திரசேகர், பூஜா

திருமணத்தை மீறிய உறவுடன் கடந்த மூன்று மாதங்களாக சேர்ந்து வாழ்ந்த ஆணும் பெண்ணும், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வாணியம்பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (39). இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் சந்திரசேகர் பெங்களூருவில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. பூஜாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவன் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர், பூஜாவுடன் வாணியம்பாடிக்கு சென்றுள்ளார். தேங்காய் பட்டறை பகுதியில் உள்ள உறவினர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பூஜாவுடன் தனி ஓலைக் குடிசை வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் பூஜா காணாமல் போனதாக அவருடைய கணவர் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பூஜாவை  அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பூஜா வாணியம்பாடியில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பூஜாவை அழைத்துச்செல்ல அவருடைய குடும்பத்தினர் வாணியம்பாடிக்கு சென்றுள்ளனர். பின்னர் சந்திரசேகர், பூஜா இடையே அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூஜாவுக்கு அறிவுரையும் வழங்கி அவரை அழைத்துள்ளனர். 

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,  பூஜாவை அவர்கள்  வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.  இதனை சற்றும் எதிர்பாராத சந்திரசேகர் திடீரென ஓடிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதை அறிந்த பூஜா அங்கிருந்த மற்றொரு கிணற்றில் குதித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in