
சான்ஸோ, உடெக், கம்போசிட் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்களுக்கு கடும் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.
உலகின் வல்லரசுக நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார போட்டி அதிகரித்து வருகிறது. இரண்டு நாடுகளும் வெவ்வேறு பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் சீன வர்த்தகத்திற்கு முட்டுகட்டை போடும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்டை நாடுகளுடன் சீனாவிற்கு உள்ள பிரச்சினைகளில், அமெரிக்கா தலையிட்டு அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தனது சொந்த நாட்டின் பாதுகாப்பிற்காக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தேவையான பொருட்களை சீனாவில் உள்ள ஜெனரல் டெக்னாலஜி, லுவோ லுவோ தொழில்நுட்ப வளர்ச்சி கழகம் ஆகிய நிறுவனங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது தங்கள் நாட்டிற்கான பாதுகாப்பை அச்சுறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து 3 சீன நிறுவனங்களுக்கு கடும் பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த தடை விதிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!