ஒருதலைக் காதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை: ஏர் இந்தியா ஊழியர் கைது!

கைது செய்யப்பட்ட பிரவீன், கொலை செய்யப்பட்ட அய்னாஸ்.
கைது செய்யப்பட்ட பிரவீன், கொலை செய்யப்பட்ட அய்னாஸ்.

ஒரு தலைக்காதலால் உடுப்பியில் பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகளைக் கொடூரமாக கொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலகாவி ரயில் நிலையம்
பெலகாவி ரயில் நிலையம்

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். குடாச்சியில் ஹசீனா தனது மூன்று குழந்தைகளான அஃப்னான்(23), அய்னாஸ்(23), அசெம்(12) மற்றும் உறவினர் ஹாஜிரா(70) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ஞாயிறன்று இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், ஹசீனா குடும்பத்தினரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இந்த கொடூரத் தாக்குதலில் ஹசீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டனர். உறவினர் ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அய்னாஸீடன் ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவாக பணியாற்றிய பிரவீன் அருண் கௌகுலே(35) என்பவர் தான் இந்த கொலைகளைச் செய்தது தெரிய வந்தது.

அய்னாஸை அவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 4 பேரை பிரவீன் கொலை செய்தாரா அல்லது வேறு பிரச்சினை காரணமாக கொலை செய்தாரா என அவரைத் தேடி வந்தனர்.

கைது
கைது

இந்த நிலையில் குடாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரவீனை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை உடுப்பி நீதிமன்றத்தில் இன்று போலீஸார் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அதற்கு முன்பாக அவரை தனியாக ஒரு இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in