அதிர்ச்சி... அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் படுகொலை! காவலாளி கைது!

அதிர்ச்சி... அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் படுகொலை! காவலாளி கைது!

மும்பை அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த விமான பணிப்பெண் ஒருவர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலையான  ரூபால் ஓக்ரே
கொலையான ரூபால் ஓக்ரே

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(24). ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி  விமான பணிப்பெண் ஆக பணியாற்றி வருகிறார். அந்தேரியில் மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில் ரூபால் ஒக்ரேக்கு அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் இருந்து நேற்று போன் செய்துள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தும் அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கூறினர். 

அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் ரூபால் ஒக்ரே கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் பவாய் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த போலீஸார் மாற்று சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்த போது அங்கு துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால்(40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து விக்ரம் அத்வாலை கைது செய்த போலீஸார்  அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் பிரச்சினை  ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்து விக்ரம் அத்வால் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in