சென்னையில் பரபரப்பு... பாஜக கொடிக்கம்பம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக - பாஜகவினர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக - பாஜகவினர்

சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஜக கொடிக்கம்பம் அமைக்க அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இல்லம் அருகில் பாஜக கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக பாஜக - இஸ்லாமியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜக மற்றும் போலீஸாரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக முழுவதும் கொடிக்கம்பம் அமைக்கப்படும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதன்படி சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று காலை அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் கவுன்சிலர் சசிகலா அதற்கான ஏற்பாடுகளை செய்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக மன்றமாக செயல்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் அமைக்கக்கூடாது என அந்த பகுதியை சேர்ந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் முற்றி மோதல் போக்கு உருவானதால் அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அத்துமீறி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை உடனே அகற்ற வேண்டுமென அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி ஊழியர்கள் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in