ஐபிஎல் பெட்டிங்கில் ரூ.1.50 கோடி இழந்த பொறியாளர்; கடன்காரர்கள் நெருக்கியதால் தற்கொலை செய்து கொண்ட மனைவி!

ரஞ்சிதா, தர்ஷன் பாபு
ரஞ்சிதா, தர்ஷன் பாபு

கர்நாடகாவில் ஐபிஎல் பெட்டிங்கில் பொறியாளர் ரூ.1.50 கோடி வரை பணத்தை இழந்த நிலையில், கடன்காரர்கள் தொல்லை கொடுத்ததால் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐபிஎல் சூதாட்டம்
ஐபிஎல் சூதாட்டம்

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்தவர் தர்ஷன் பாபு. இவர் ஹோசதுர்காவில் உள்ள சொட்டுநீர்ப் பாசனத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தர்ஷன் பாபு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணத்தை இழந்த பிறகு அடுத்தடுத்து மேலும் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2021 முதல் 2023 வரை 3 ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.1.50 கோடி வரை கடனாளி ஆகியுள்ளார். பாதிக்கும் மேற்பட்ட தொகையை திரும்ப செலுத்தியிருந்தாலும், இன்னும் ரூ.84 லட்சம் செலுத்த வேண்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொடர்ச்சியாக பணத்தை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை
தூக்கிட்டு தற்கொலை

இதனால் விரக்தியடைந்த ரஞ்சிதா, கடந்த 18ம் தேதியன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதாவின் தந்தை வெங்கடேஷ், இது குறித்து சித்ரதுர்கா போலீஸில் புகார் அளித்தார்.

அதில், கடன் கொடுத்தவர்களின் தொடர்ச்சியான துன்புறுத்தலால் தனது மகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதுவே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாகவும் கூறியுள்ளார். தனது மருமகனை அடையாளம் தெரியாத சிலர் எளிதாக பணக்காரர் ஆகலாம் என ஆசை வார்த்தை கூறி, சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும், சிலர் வெற்று காசோலைகளை பெற்றுக்கொண்டு, கடன் கொடுத்து ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடன் கொடுத்ததாகக் கூறப்படும் 13 பேரின் பெயர்களையும் வெங்கடேஷ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் பெட்டிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்ததோடு, மனைவியையும் பறிகொடுத்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in