‘ஐயோ... நாகம்...’ பாம்பை விரட்ட வீட்டை எரித்த குடும்பம்; நகை, பணம், தானிய மூட்டைகள் சாம்பலான துயரம்!

பாம்பு புகுந்த வீடு தீக்கிரை
பாம்பு புகுந்த வீடு தீக்கிரை

வீட்டினுள் புகுந்த நாகப்பாம்பினை விரட்டை உத்திரபிரதேசத்தில் ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக வீட்டையே எரித்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் வசித்து வருபவர் ராஜ்குமார். டெல்லியில் கடை ஒன்றில் பணியாற்றி வரும் ராஜ்குமார், ஞாயிறு விடுமுறையை ஒட்டி பண்டா வந்திருந்தார். மனைவி மற்றும் 5 குழந்தைகள் வசிக்கும் அந்த வீட்டில், தனது வாழ்நாள் சேமிப்பான பணம் மற்றும் நகைகளை ராஜ்குமார் பதுக்கி வைத்திருக்கிறார். மேலும் சொந்த வயலில் அறுவடை செய்த பல நூறு கிலோ தானியங்களையும் மூட்டைகளாக வீட்டின் அறைகளில் அடுக்கி வைத்திருந்தார்கள்.

நெருப்பு
நெருப்பு

இந்த நிலையில் நேற்று ராஜ்குமார் வீடு களேபரமானது. ராஜ்குமாரின் குழந்தைகள் வீட்டினுள் நாகப்பாம்பு புகுந்துவிட்டதாக அலறினார்கள். ராஜ்குமாரின் மனைவியும் அதனை உறுதி செய்தார். வீட்டில் பதுங்கி இருக்கும் நாகத்தை ஒரே நபராக ராஜ்குமார் எதிர்கொள்வது குறித்து அவரது குடும்பம் அச்சம் தெரிவித்தது. அதே வேளையில் உதவிக்கு அக்கம்பக்கத்திலிருந்து ஆட்களை வரவழைக்கவும் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவிக்கு தயக்கம் எழுந்தது.

காரணம், அந்த வீட்டில்தான் தங்களது வாழ்நாள் சேமிப்பை ராஜ்குமாரும் அவரது மனைவியும் ரொக்கம் மற்றும் நகையாக பதுக்கி வைத்துள்ளனர். வங்கி, பாதுகாப்பு பெட்டக வசதி ஆகியவற்றின் மீதெல்லாம் அந்த தம்பதிக்கு நம்பிக்கை கிடையாது. எனவே வெளியாரை அழைக்காது, தங்களுக்கும் பாதிப்பு நேராது நாகப்பாம்பை வீட்டிலிருந்து வெளியேற்ற, தீர யோசித்து ஒரு உபாயத்தை கண்டறிந்தனர். அதன்படி மாட்டு சாண வறட்டிகளைக் கொண்டு வீட்டுக்குள் ஆங்காங்கே மூட்டம் போட்டனர்.

ராஜ்குமார் வீடு
ராஜ்குமார் வீடு

புகை நெடி தாங்காது நாகம் வெளியேறும்; அதனை அடித்துக் கொன்றுவிடலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால் நடந்ததோ வேறு; அதிகப்படி புகைமூட்டம் ஒரு கட்டத்தில் நெருப்பாக மாறியதில் வீடு பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. அப்போதும் அவசரப்பட்டு ஆட்களை அழைக்காது, தாங்களே நெருப்பை அணைக்க முயன்றனர். தகவலறிந்து தீயணைப்பு வாகனம் விரைந்து வருவதற்குள் வீடு தீக்கிரையானது. பாம்பை விரட்டும் முயற்சியில் வீடு எரிந்ததோடு, வாழ்நாள் சேமிப்பான பணம், நகைகளை நெருப்புக்கு கொடுத்ததோடு, பல நூறு கிலோ அடங்கக்கூடிய தானிய மூட்டைகளும் சாம்பலாயின.

பணத்தை பாதுகாப்பது முதல் பாம்பை விரட்டுவது வரை பிற்போக்காக யோசித்ததில், ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் தற்போது அக்கம்பக்கத்தார் மற்றும் அரசு உதவியை எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in