பெண்ணிடம் பேசியதால் வாலிபரின் கால் துண்டிப்பு: கும்பல் மீது டிஜிபியிடம் புகார்

பெண்ணிடம் பேசியதால் வாலிபரின் கால் துண்டிப்பு: கும்பல் மீது டிஜிபியிடம் புகார்

சாதிய வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

தருமபுரியில் உயர் வகுப்பை சார்ந்த பெண்ணிடம் பேசியதாக தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஜீவா என்பவரை சிலர் அடித்து சித்ரவதை செய்து அவரது காலை துண்டாக வெட்டியது தொடர்பாக மே 17 இயக்கம், தமிழ் புலிகள் அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினை சார்ந்த நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்ப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பேரறிவாளன், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜீவா (17) என்ற வாலிபர் கடந்த 28-ம் தேதி சந்திர நல்லூர் கோவில் அருகே தனது நண்பர்களுடன் சென்று தோழியை சந்தித்து பேசிவிட்டு சென்றார். அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் ஜீவா மற்றும் அவரது நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு, ஜீவாவின் ஒரு காலை துண்டாக வெட்டி கொடூர சம்பவத்தை அறங்கேற்றினர். இது தொடர்பாக தருமபுரி போலீஸார் விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் சாதி வகுப்பை சேர்ந்த பெண்ணிடம் பேசியதால் ஜீவாவை சாதிய வன்மத்துடன் கும்பல் ஒன்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கை வெறும் விபத்து என தருமபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் சாதிய வன்மத்துடன் கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் ஜீவாவிடம் விசாரணை நடத்தி அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இதேபோல் ஜீவாவின் சகோதரர் முருகனும் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in