`நடிகை மீரா மிதுனை உடனே கைது செய்யுங்கள்'- நீதிபதி அதிரடி காட்ட என்ன காரணம்?

`நடிகை மீரா மிதுனை உடனே கைது செய்யுங்கள்'- நீதிபதி அதிரடி காட்ட என்ன காரணம்?

சர்ச்சை நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவரை உடனடியாக கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நடிகை மீரா மிதுன் நடித்த `பேயை காணோம்' என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில் கடந்த மார்ச் 16-ம் தேதி தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குநர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக தயாரிப்பாளர் சுருளிவேல் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஆடியோ பதிவு செய்யபட்ட தினத்தில் தான் ஒரு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகை மீரா மிதுன் அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும், தற்போது முதல்வர் மீது அவதூறு பரப்பியுள்ளார் என்றும் இதனால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதனால், மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், மீராமிதூன் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, அவரை கைதுசெய்து விசாரிக்கவும், அவர் பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிரடியாக கூறினார். உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை மீரா மிதுனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.