நடிகர் விஷால் லஞ்சப் புகார்: தணிக்கை குழு உறுப்பினர்கள் 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

நடிகர் விஷால் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் அளித்த விவகாரத்தில் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள திரைப்பட தணிக்கை குழுவை அணுகியபோது அவர்கள் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இறுதியாக ஆறரை லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்த பின்னரே தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.

மேலும் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ, தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க ஏழு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதும் இறுதியாக 6.50 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்று சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.

இந்த லஞ்சப்பணம் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in