ரூ.1.70 கோடி ஏமாற்றி விட்டார்... கட்டிடப் பொறியாளர் மீது நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!

பாபி சிம்ஹா
பாபி சிம்ஹா

கொடைக்கானலில் வீடுகட்ட 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு கட்டிடப் பொறியாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா
நடிகர் பாபி சிம்ஹா

கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாபி சிம்ஹா, ‘’ பேத்துபாறையில் எனது பெற்றோருக்காக வீடுகட்டி வருகிறேன். ஒப்பந்ததாரர் ஜமீர் என்பவர் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார்.

ஆனால், வீட்டை முறையாக கட்டவில்லை. கொடுத்த ரூபாய்க்கான வரவு செலவு கணக்குகளைக் காட்டாமல் மேலும் 50 லட்சம் கொடுத்தால் தான் வீட்டை கட்ட முடியும் என மிரட்டுகிறார். விரைவில் அவர் மீது போலீஸில் புகார் அளிக்க உள்ளேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in