உயிரிழந்த முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு... 2 போலீஸ்காரர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

முக்தார் அன்சாரி
முக்தார் அன்சாரி

கடந்த வாரம் உயிரிழந்த தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்தார் அன்சாரி
முக்தார் அன்சாரி

கடந்த 2005-ம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி ர் மீது 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

இவர் கடந்த வாரம் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அன்சாரியின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியன. இதனால் பண்டா சிறையில் ஸ்லோ பாய்சன் மூலம் இறந்தாக அன்சாரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்சாரி உடல் அடக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, லக்னோவில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணியாற்றும், ஃபயாஸ் கான், அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது மரணம் குறித்த சந்தேகங்களையும் எழுப்பியிருந்தார். இந்த ஸ்டேடட்ஸ் வைரலானது. இதையடுத்து அவரது வாட்ஸ் அப் பதிவு இடுகையில் இருந்து நீக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் அஃப்தாப் ஆலம் என்பவர் முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அன்சாரியை மெசியா என்றும் கூறிள்ளார். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று சந்தோலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் சிங் இன்று கூறியுள்ளார். சமூக ஊடகக் கொள்கையையும், மாநில அரசின் நடத்தை விதிகளையும் அஃப்தால் ஆலம் மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

தாதா முக்தார் அன்சாரிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட இரண்டு போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல் துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in