3 ஆண்டுகளாக நெருக்கம்... திருமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் வெறிச்செயல்

3 ஆண்டுகளாக நெருக்கம்... திருமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் வெறிச்செயல்

பெங்களூருவில் உள்ள குமாரசாமி லேஅவுட் பகுதியில் திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மூன்று குழந்தைகளுடன் விவாகரத்து பெற்ற 32 வயது பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட நபரும் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூருவில் உள்ள தூபப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒன்றாக வேலை செய்து வந்தனர். கடந்த மூன்று வருடங்களாக நெருங்கி பழகி வந்த அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி அகமது என்பவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்த காரணத்தால், ஆத்திரமடைந்த அகமது இன்று அப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.

ஆசிட் வீச்சில் வலது கண்ணில் காயம் அடைந்த அப்பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பேசிய பெங்களூரு தெற்கு டிசிபி ஹரிஷ் பாண்டே, " பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. முகத்தில் ஆசிட் வீசப்பட்டதில் அப்பெண்ணின் பார்வையும் ஓரளவு மீட்கப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக குணமடைவார் என்று நம்புகிறோம். குற்றம் சாட்டப்பட்ட அகமது தலைமறைவாக உள்ளார். அவரை விரைவில் கைது செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் பெங்களுருவில் நடக்கும் 3வது ஆசிட் வீச்சு சம்பவம் இதுவாகும். தொடர்ந்து ஆசிட் வீச்சு குற்றங்கள் நடப்பதால் பெங்களூரு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in