கல்குவாரியில் விபத்து: நான்கு தொழிலாளர்களின் நிலை என்ன?

குவாரி
குவாரி கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி பகுதியில் கல்குவாரியில் நேற்று நள்ளிரவு விபத்து ஏற்பட்டது. இதில் இடுபாடுகளில் 6 பேர் சிக்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பேரையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே ஆடைமிதிப்பான் குளம் உள்ளது. இதன் அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இங்கே குவாரியின் உள்பகுதியில் நேற்று இரவு வழக்கம் சில தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்பகுதியில் இருந்த பாறைகள் உடைந்து, உருண்டு விழுந்தன. நெல்லையில் மழை பெய்து வருவதால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணியாளர்கள் பணியில் ஈடுபடவில்லை. குவாரிக்குள் 2 லாரிகள், 3 ஜேசிபி இயந்திரங்கள் மட்டும் இருந்தன. இதில் ஜேசிபி ஓட்டுநர்கள் செல்வம், முருகன், விஜய் ஆகியோர் அமர்ந்திருந்த ஜேசிபியின் மீது முதலில் பாறைகள் உருண்டு விழுந்தன. தொடர்ந்து அங்கே நின்ற லாரிகள் மீதும் பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் லாரி ஓட்டுநர்கள், செல்வகுமார், ராஜேந்திரன் ஆகியோரும் சிக்கினர்.

குவாரியின் உள்பகுதியில் பாறை விழுந்து 6 பேர் வெளியில் வர முடியாமல் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இருவர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன்களின் உதவியுடன் மற்ற 4 பேரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 300 அடி பள்ளம் கொண்ட குவாரியில், மழைக்கு மத்தியில் மீட்புப்பணி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in