மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

பென்னிகானஹள்ளி  மெட்ரோ ரயில் நிலையம்
பென்னிகானஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு மர்மநபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பென்னிகானஹள்ளி பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. அன்றாடம் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே பயணிகள் வசதிக்காக நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த நடைபாலத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நேற்று மாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால், அந்த நபரிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

அங்கிருந்து தப்பியோடி மெட்ரோ நிலைய ஊழியரிடம் நடந்த சம்பவம் இதுகுறித்து இளம்பெண் கூறியுள்ளார். இதையடுத்து மெட்ரோ நிலைய ஊழியர் உடனடியாக அந்த மர்மநபரை பிடித்து ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் மதுபோதையில் இருந்ததும் , இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in