விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... டிராக்டரில் இருந்து பல்டி அடித்த இளைஞர் கோமாவிற்கு சென்றார்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
Updated on
1 min read

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, உற்சாக மிகுதியில் டிராக்டரிலிருந்து பல்டி அடித்த நபர் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.

கடந்த 19-ம் தேதி அன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாகக் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞர் டிராக்டரின் முன்புறத்தில் ஏறி நின்று ஆடியபடியே சென்றார். ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியால் டிராக்டரிலிருந்து சாலையை நோக்கி அவர் திடீரென பல்டி அடித்தார்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

அப்போது அவரது தலை சாலையில் பலமாக மோதியது. அதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்தது. இதைக்கண்டு பதறிப்போன அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக கடப்பா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கிரண் கோமா நிலைக்குச் சென்றார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்ட இளைஞர் கோமா நிலைக்கு சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in