அதிர்ச்சி! திருமணம் செய்த 3வது நாளில் இளம் காதல் ஜோடி வெட்டிக்கொலை… பெற்றோர் வெறிச்செயல்!

அதிர்ச்சி! திருமணம் செய்த 3வது நாளில் இளம் காதல் ஜோடி வெட்டிக்கொலை… பெற்றோர் வெறிச்செயல்!

தூத்துக்குடியில் 3 தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் (24) என்பவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தன்னுடன் படித்து வந்த கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இருவரும் கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கார்த்திகாவை மாரிசெல்வம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மாரிசெல்வத்தின் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக வெட்டி, கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். ஆறு பேர் கொண்ட கும்பல் கொன்றதாக தகவல் தெரியவந்துள்ளது.

கொலை செய்தவர்கள் பெண்ணின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது. போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in