அந்த பெண்ணுக்கும், உனக்கும் என்ன தொடர்பு...வாலிபரை தாக்கும் கும்பல்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

மனைவி கண் முன்பு தாக்கப்படும் வாலிபர்.
மனைவி கண் முன்பு தாக்கப்படும் வாலிபர்.

சார்மினார் அருகே இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்த இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வாலிபர்
தாக்குதலுக்கு உள்ளான வாலிபர்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மசூலிப்பட்டினம் - கோல்கொண்டா கோட்டை சந்திப்பு சாலையின் மையப்பகுதியில் சார்மினார் கட்டிடம் உள்ளது. கலை எழிலுடன் வரலாற்று சிறப்புமிக்க சார்மினார், முசி ஆற்றங்கரையில் உள்ளது. தற்போது மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில், சார்மினார் அருகே கைக்குழந்தை, மனைவியுடன் வந்த வாலிபரை ஒரு கும்பல் குறிவைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாலிபரிடம் விசாரிக்கும் கும்பல்
வாலிபரிடம் விசாரிக்கும் கும்பல்

அந்த வீடியோவில், பர்தா அணிந்த மனைவி, கைக்குழந்தையுடன் வாலிபர் வருகிறார். அப்போது, அப்பகுதியில் உள்ள பணியாளர்கள், அந்த வாலிபரை நிறுத்தி யார் என விசாரணை நடத்துகின்றனர். கைக்குழந்தையை தோளில் வைத்திருக்கும் அக்குழந்தையின் தந்தையான வாலிபரிடம், எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அந்த வாலிபர், வைத்திருந்த அடையாள அட்டை மூலம் அவர் இந்து என்று கண்டுபிடிக்கப்படுகிறது.

இதையடுத்து அந்த கும்பல், அந்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்குகிறது. இதை அவரது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மனைவி தடுக்கிறார். பதற்றத்துடன் அந்த இளம்பெண், அடிப்பவர்களிடம் கெஞ்சும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் உள்ளவர், பி.ராகுல் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சார்மினார் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு முனைகளில் இருந்து வரும் சார்மினார் அருகே நடந்த இந்த சம்பவம் இந்த நகரத்தின் இமேஜை சேதப்படுத்தியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சார்மினார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in