
கேரளாவில் பள்ளி வகுப்பறையில் புகுந்து 6ம் வகுப்பு மாணவியை தெரு நாய் கடித்துக் குதறியது. படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, அவற்றால் கடிக்கப்பட்டு பெரியவர், சிறியவர் என நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த ஜுன் மாதம் வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல அர்ஜுனன் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு வந்துள்ளார். சிறுமி பள்ளி வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறியுள்ளது. அருகில் இருந்த சிறுமிகள் அலறிய அடித்து ஓடிய நிலையில், சிறுமியின் அலறல் கேட்டு ஓடி வந்த ஆசிரியர் சிறுமியை மீட்டுள்ளார்.
நாய் கடித்து படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை கடித்த நாயை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அடித்தே கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்