விடுதி அறையில் காதலர்கள்; ரகசிய கேமிரா மூலம் வீடியோ எடுத்து மாணவியை மிரட்டிய தம்பதியர்!

நயனா
நயனா

தங்கும் விடுதி அறையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியினை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து, மிரட்டி பணம் பறிக்க முயன்ற கணவன் மனைவியை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரண்
கிரண்

பெங்களூரு கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஓட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் நயனா மற்றும் அவரது கணவர் கிரண் நிர்வகித்து வருகின்றனர். நயனாவின் உறவினர் வீட்டு பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் அடிக்கடி நயனாவின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளார்.

மேலும் அவ்வப்போது அவர் தனது காதலனையும் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் அவர்கள் இருவரும் தங்கியதுடன், உல்லாசமாக இருந்துள்ளனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த நயனா மற்றும் கிரண், காதல் ஜோடி தங்கும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி அவர்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர்.

இதன்பின் அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ் அப்பிற்கு கிரண் அனுப்பி வைத்து, அந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என கூறி, அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோருடன் சேர்ந்து சந்திரா லே-அவுட் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீஸார் ஓட்டலில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் அறையில் ரகசிய கேமரா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் நயனா மற்றும் கிரண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in