அதிர்ச்சி... மூன்று நாளில் வளைகாப்பு... தற்கொலை செய்த நிறைமாத கர்ப்பிணி!

செல்வகுமாரி
செல்வகுமாரி

பண்ருட்டி அருகே நிறைமாத கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள  சம்பவம் அவரது உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோந்தவா் செல்வகுமாரி (21). அதே பகுதியைச் சேர்ந்தவா் முத்து (25). இவா்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த காதலை ஏற்க பெற்றோர் சம்மதிக்கவில்லை. அதனால் இருவரும் தங்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் செல்வகுமாரி கர்ப்பமடைந்தார். அந்த செய்தி கேட்டு இரு வீட்டாரும் மகிழ்ச்சியடைந்து இவர்களை ஏற்றுக் கொண்டனர். செல்வகுமாரி தற்போது  நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 27-ம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

கர்ப்பம்
கர்ப்பம்

அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை செல்வகுமாரி, தனது கணவர்  வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த காடாம்புலியூர் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் செல்வகுமாரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணிக்கு  பெற்றோர் சம்மதத்துடன் வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in