அய்யய்யோ, வடமாநில கும்பல் குழந்தையைக் கடத்துறாங்க... வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது!

கைது செய்யப்பட்ட மணிகண்டன்
கைது செய்யப்பட்ட மணிகண்டன்
Updated on
2 min read

சென்னையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புழல் விநாயகபுரம் மற்றும் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர், நான்கு குழந்தைகளைக் கடத்திச் சென்று விட்டதாகவும், அதேபோல் கங்கையம்மன் கோயில் தெருவில் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தாகவும், எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஆடியோ நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் புழல் போலீஸார், வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பியவர் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் (34) குழந்தைகளைக் கடத்துவதாக பொய்யான தகவல்களை வாட்ஸ் அப்பில் பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் புழல் போலீஸார், பொய் வதந்தி பரப்பிய மணிகண்டனை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும்‌ வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in