முட்டித் தூக்கி வீசிய மாடு... நடந்து சென்றவர் பேருந்தில் சிக்கி பலியான பரிதாபம்!

முட்டித் தூக்கி வீசிய மாடு...  நடந்து சென்றவர் பேருந்தில் சிக்கி பலியான பரிதாபம்!

சாலையில் நடந்து சென்றவர்  மாடு முட்டி தூக்கி வீசப்பட்டதில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள  சம்பவம்  நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாகை மேல கோட்டவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன் மகன் சபரிராஜன்(55). இவர் மேலகோட்டை வாசல் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே நேற்று  சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக சென்ற மாடு அவரை முட்டியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சபரிராஜன் மீது  திருவாரூர் மார்க்கத்தில் இருந்து நாகை வந்த வந்த அரசுப் பேருந்தின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய சபரிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சாலையில் இறந்து கிடக்கும் சபரிராஜன்
சாலையில் இறந்து கிடக்கும் சபரிராஜன்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த  நாகை நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து முதியவரின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவம் நடைபெறுவதை தடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கால்நடைகளின் உரிமையாளர் மற்றும் வளர்ப்பு விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in