
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி தீராத வயிற்று வலியால் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் கௌரிசங்கர்(35). கல்லீரல் மற்றும் வயிற்றுவலி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கௌரி சங்கர் கடந்த திங்கட்கிழமை சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயிற்றுவலி குறையாமல் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மருத்துவமனை முதல் தளத்தின் ஜன்னல் வழியாக இறங்கி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் விமலா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டனர். பின்னர் மருத்துவர்கள் கௌரி சங்கரை பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் ராஜீவ் காந்தி காவல் நிலைய போலீஸார் கௌரி சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீராத வயிற்று வலியால் நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!