
கேரளாவில் 18 வயது மாற்றுத் திறனாளி மகனை ஒட்டுத் துணிகூட இல்லாமல் அவரது பெற்றோர் அறையில் பூட்டி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா மேதொட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெற்றோர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தங்களது 18 வயது மாற்றுத்திறனாளி மகனை சரியாக பராமரிக்க முடியாமல் இருந்து வந்துள்ளனர். மகனுக்கு உடுத்த உடை கூட கொடுக்காமல், வீட்டிற்கு வெளியே அழுக்கு கொட்டகையில் போட்டு அடைத்து வைத்திருந்தனர்.
வீட்டின் வெளியே அவர் கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நோய்த்தடுப்பு சிகிச்சை அதிகாரிகள் வீட்டுக்கு வந்து சோதனை செய்தபோது இது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பென்னிடு ஊராட்சி நிர்வாகத்தினர், ஊராட்சி அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்த சிறுவனை மீட்டனர். மலம் கழித்ததாகவும், வீட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை வீட்டின் வெளியே உள்ள கொட்டகையில் அடைத்து வைத்துள்ளதாக பெற்றோர் கூறினர்.
அந்தப் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்த அதிகாரிகள், அந்த மாற்றுத் திறனாளிக்கு ஆடை அணிவித்து, உணவு அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரால் வெளியே செல்ல முடியாததாலும் அல்லது அவரை யாரிடமாவது ஒப்படைக்க முடியாத காரணத்தினாலும் தான் குழந்தையை வீட்டின் வெளியே உள்ள கொட்டகையில் பூட்டி வைத்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!