போலீஸார் முன்னிலையில் ஓட்டல் அதிபர் மீது கொலைவெறி தாக்குதல்... சென்னையில் பரபரப்பு!

தாக்குதல் நடத்திய கும்பல்
தாக்குதல் நடத்திய கும்பல்

போலீஸார் முன்பு ஓட்டல் அதிபரை ஓட ஓட விரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய ஓய்வு பெற்ற எஸ்.ஐ மற்றும் அவரது நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அத்துடன் இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த போக்குவரத்து காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை ஜார்ஜ்டவுன் தாயப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(36). இவர் ஓ.எம்.ஆர் பகுதியில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று மாலை மணிவண்ணன் தனது தோழியுடன் காரில் மெரினா லூப் சாலை வழியாக ஓஎம்ஆரில் உள்ள தனது ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டினப்பாக்கம் லூப் சாலை சந்திப்பில் முன்னாள் சென்ற சிவப்பு நிற கார் நீண்ட நேரமாக வழிவிடாமல் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் சென்று திடிரென பிரேக் போட்டு நின்றுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல்
தாக்குதல் நடத்திய கும்பல்

இதில் சுதாரித்துக் கொண்ட மணிவண்ணன் பிரேக் பிடித்து தனது காரை‌ நிறுத்தி விபத்தை தவிர்த்துள்ளார். அத்துடன் முன்னால் சென்ற கார் ஓட்டுநரிடம் ஏன் திடீரென நிறுத்தினீர்கள் எனக்கேட்டுள்ளார். அப்போது காரில் பயணம் செய்த ஐந்து பேரும் இறங்கி வந்து மணிவண்ணனை தாக்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ,காவலர் ஓடி வந்து தாக்குதலை தடுக்க முயன்றனர்.

தாக்குதல் நடத்திய கும்பல்
தாக்குதல் நடத்திய கும்பல்

அப்போது மதுபோதையில் இருந்த அந்த கும்பலில் ஒருவர், தான் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் லோகப்பிரகாசம் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் போதை ஆசாமிகள் 5 பேரும் போலீஸார் கண் முன்னே மணிவண்ணனின் சட்டையை கிழித்தெறிந்து நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர். அத்துடன் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை வேடிக்கை பார்த்த போக்குவரத்து காவலர்களிடம் பொதுமக்கள் மணிவண்ணனை காப்பாற்றுமாறு கேட்டுள்ளனர். ஆனால், போலீஸார் அதற்கு செவிசாய்க்காமல் வேடிக்கை பார்த்ததுடன் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அந்த போதை கும்பலிடம் இருந்து மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது.

தாக்குதல் நடத்திய கும்பல்
தாக்குதல் நடத்திய கும்பல்

இதுகுறித்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌ மேலும் மதுபோதையில் தாக்குதல் நடத்திய நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவயிடத்தில் வேடிக்கை பார்த்த போக்குவரத்து காவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சாலையில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி எனக்கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து

ஓட்டல் உரிமையாளர் மணிவண்ணனை அவரது தோழி கண் முன்னே துரத்தி துரத்தி சட்டையை கிழித்து தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in