`என் பிள்ளைக்கு இப்படியொரு நிலையா?'- மகனை கொன்று உயிரை மாய்த்த தாய்

`என் பிள்ளைக்கு இப்படியொரு நிலையா?'- மகனை கொன்று உயிரை மாய்த்த தாய்

ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது மகனை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய், தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சோக சம்பவம் கல்பாக்கம் அருகே நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்த பூபதி (40)- கோடீஸ்வரி (32) தம்பதிக்கு இரு மகள்கள், இரண்டரை வயது மகனும் உள்ளனர். மகன் அரிகரசுதன் ஆர்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதோடு, வாய்பேச முடியாமல் இருந்து வந்தார். மகனுக்கு ஆக்குபேஷன் தெரபி சிகிச்சையும் பெற்றோர் அளித்து வந்துள்ளனர். ஆனால், மருத்துவ சிகிச்சையில் மகனுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தனது மகனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதே என்ற வேதனையில் தாய் கோடீஸ்வரி இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தனது மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற கோடீஸ்வரி, தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சதுரங்கபட்டினம் காவல் துறையினர் இரு உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோடீஸ்வரியின் சகோதரர் ரமேஷ் என்பவர் இருவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோடீஸ்வரியின் கணவர் பூபதி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.